புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சிறார் நீதி வாரியம் இன்று (மே 22) ரத்து செய்துள்ளது.
விபத்துக்குள்ளான கார் / மதுபான விடுதியின் சிறுவன்
விபத்துக்குள்ளான கார் / மதுபான விடுதியின் சிறுவன்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை சிறார் நீதி வாரியம் இன்று (மே 22) ரத்து செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து நேரிட்ட நிலையில், 15 மணிநேரத்தில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. பலவேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விபத்து ஏற்படுத்திய சிறுவனை மைனராகக் கருதாமல் 18 வயதுக்கு மேற்பட்டவராகக் கருதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், சிறுவனின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்றும் சிறார் நீதி வாரியத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மதுபோதையில் சொகுசுக் கார் ஓட்டி சிறுவன் ஏற்படுத்திய விபத்தில், ஐ.டி., ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை (மே 19) அதிகாலை நடந்த இந்த விபத்தில், காரை ஓட்டிவந்த சிறுவன் 18 வயது பூர்த்தியாகாதவர். (விபத்து ஏற்படுத்திய சிறுவனின் வயது 17 ஆண்டுகள் 8 மாதங்கள்.)

விபத்துக்குள்ளான கார் / மதுபான விடுதியின் சிறுவன்
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

12ஆம் வகுப்பு படித்துள்ள அவர், தேர்வில் தேர்ச்சி அடைந்ததைக் கொண்டாடும் விதமாக சொகுசு விடுதியில் நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்துள்ளார். சுமர் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அந்த மதுபான விருந்தை ஏற்பாடு செய்துள்ளார். அதன் சிசிடிவி காட்சிகளும் காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டது.

மதுபோதையில் தனது சொகுசுக்காரை குறுகலான சாலையில் அதிவேகமாக இயக்கியதில், நிலைத்தடுமாறி முன்பு சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஐ.டி. ஊழியர்களான அனிஸ் துதியா, அஸ்வினி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை புணேவில் கட்டட தொழிலதிபர் எனத் தெரியவந்தது.

விபத்துக்குள்ளான கார் / மதுபான விடுதியின் சிறுவன்
மகாராஷ்டிர கார் விபத்தில் சிறுவனை வயதுவந்தவராகக் கருத முடியுமா? முன் உதாரண வழக்குகள்!!

சிறுவனுக்கு ஜாமீன் ரத்து

போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து சிறார் நீதி வாரியம் அச்சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது.

இதற்கு நாடுமுழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பணத்தைப் பொறுத்து நீதியும் மாறுபடுகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.

இதன் விளைவாக ஜாமீன் வழங்கப்பட்ட 3 நாள்களில் மீண்டும் அந்த ஜாமீன் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com