
இந்திய தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் ஜெபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்தில் கவனம் செலுத்தி நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் பிரசாரத்தில் மத மற்றும் வகுப்புவாத கருத்துகளைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரசார உரைகளை நிறுத்துமாறு பாஜகவை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் போன்ற தவறான கருத்துகளை நட்சத்திர பேச்சாளர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து அரசியலாக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு படைகளின் சமூக-பொருளாதார அமைப்பு குறித்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் பேச்சாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜக இருகட்சிகளும் தங்களுக்குள் தெரிவித்துக் கொள்ளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித கூடுதல் சலுகைகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.