மோடி- அதானி ஊழல்: ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் விசாரணை! காங்கிரஸ் அறிவிப்பு!
அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல்: பாராளுமன்ற குழு விசாரணை, காங்கிரஸ் உறுதி


அதானி குழுமம், தரக்குறைவான நிலக்கரியை கூடுதல் விலைக்கு விற்று ஊழல் செய்ததாக பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்.
பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட குறிப்பில், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு விலை உயர்ந்த தூய்மையான எரிபொருள் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலக்கரி தரக்குறைவானதாக அதானி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் ஒருங்கிணைந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு திட்டத்தினரால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுடுள்ளது.
ராகுல் காந்தி, இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில், அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையை அமைதியாக்க எத்தனை டெம்போக்களில் மோடி பணம் பெற்றார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனினும் முன்னதாக பலமுறை இதே குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போது நிறுவனம் மறுத்துள்ளது.
காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமெஷ் வெளியிட்ட குறிப்பில், ஒருங்கிணைந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு திட்டத்தின் விசாரணையில் பல கப்பல்களில் தரக்குறைவான நிலக்கரி இந்தோனேஷியாவில் இருந்து தருவிக்கப்பட்டு அதிக விலைக்கு அதானியால் 2014-ல் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி கூடுதலாக அதானி இலாபம் பார்த்த வேளையில் மக்கள் காற்று மாசினாலும் மின்சார விலை உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும் எனவும் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் திரும்ப பெறப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...