மக்களவைத் தேர்தலில் 10% க்கும் குறைவான பெண் வேட்பாளர்கள்!

2024 மக்களவைத் தேர்தலில் 10% க்கும் குறைவான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் 10% க்கும் குறைவான பெண் வேட்பாளர்கள்!
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் பெண்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஏழு கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த 8,337 வேட்பாளர்களில், வெறும் 797 பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். இது 9.5 சதவிகிதமாகும்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதற்கான மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மசோதாவை மீண்டும் உயிர்ப்பிக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த மசோதா இன்னும் அமலுக்கு வரவில்லை.

முதல் கட்ட தேர்தலில் 1,618 வேட்பாளர்களில், 135 பெண்கள் மட்டும் போட்டியிட்டனர். 2 ஆம் கட்ட தேர்தலில் 1,192 வேட்பாளர்களில், 100 பெண்கள் போட்டியிட்டனர். 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண்கள் உள்பட 1,352 வேட்பாளர்களும், 4 ஆம் கட்டத்தில், 170 பெண்கள் உள்பட 1,717 வேட்பாளர்களும், 5 ஆவது கட்டத்தில் மிகக் குறைவான வேட்பாளர்களான 695 பேரில், 82 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

6 ஆம் கட்டத்தில், 869 வேட்பாளர்களில், 92 பெண்களும், 7 ஆவது கட்டத்தில், 95 பெண்கள் உள்பட 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த குறிப்பிடத்தக்க பாலின ஏற்றத்தாழ்வு, அரசியல் ஆய்வாளர்கள்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 10% க்கும் குறைவான பெண் வேட்பாளர்கள்!
மோடி- அதானி இணைந்து இயக்கும்.. : காங்கிரஸின் வைரல் போஸ்டர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com