மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள் என்று அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழர்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார்.

செல்வப்பெருந்தகை கூறியதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். " என்று தெரிவித்தார்.

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!
கடந்த ஆண்டைக் காட்டிலும் மே மாதத்தில் பீர் விற்பனை அமோகம்!

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “எங்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும், மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள், 2 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

முற்றுகை தேதியை முன்பே அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com