வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

வாரணாசியில் பிரியங்கா காந்தி மற்றும் டிம்பிள் யாதவ் ரோடுஷோ!
பிரியங்கா காந்தி  மற்றும் டிம்பிள் யாதவ்
பிரியங்கா காந்தி மற்றும் டிம்பிள் யாதவ்ஐஏஎன்எஸ்

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மற்றும் சமஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் வாரணாசியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மே 25-ல் ரோடுஷோவில் பங்கேற்கவுள்ளனர்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் இந்தியா கூட்டணி வாரணாசி வேட்பாளருமான அஜய் ராய், “பிரியங்கா மற்றும் டிம்பிள் இணைந்து காசியில் மே 25 பொதுமக்கள் பேரணியில் பங்கேற்கின்றனர். அவர்கள் பெண்களின் பிரச்னைகள் குறித்து பேசவுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ரவிதாஸ் கோயிலில் வழிபட்ட பிறகு சீர் கோவர்தன் பகுதியில் இருந்து இரண்டு தலைவர்களும் பேரணியில் கலந்து கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மே 28 அல்லது 29 தேதிகளில் வாரணாசியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான வாக்குப் பதிவு ஜுன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com