
ஹைதராபாத்: தனியார் நிறுவனத்தின் பைக் டாக்ஸி ஓட்டுநர் சந்தீப் என்பவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் துக்காராம் கேட் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்கொண்டாவை சேர்ந்த சந்தீப், நகரத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளார்.
அதிகமாக போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மறுநாளும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறியபோது சந்தீப் ரெட்டியை (28) பார்த்துள்ளார் சிறுமி. சிறுமியின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்தீப், அவரை பல்வேறு இடங்களின் வழியாக கச்சிகுடாவுக்கு அழைத்துச் சென்று விடுதி அறையில் தங்க வைத்துள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் கச்சிகுடாவில் சிறுமி தனித்திருப்பதை பார்த்தவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கான பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தில் சந்தீப் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.