தில்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்: ராம்தாஸ் அத்வாலே

2019 போலவே 2024-ல் தில்லியில் பாஜக வெற்றி: அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே (கோப்புப் படம்)
ராம்தாஸ் அத்வாலே (கோப்புப் படம்)

தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 2014 மற்றும் 2019 தேர்தல்களில், தில்லியில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வென்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இருந்தாலும், தில்லியில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று உறுதிபட அவர் கூறினார்.

18-ஆவது மக்களவையை தோ்வு செய்ய ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

6-ஆம் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் வியாழக்கிழமையுடன் பிரசாரம் முடிவடைந்தது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

கேஜரிவால் இல்லாமல் களையிழந்து காணப்பட்ட ஆம் ஆத்மியின் பிரசாரம், அவரது வருகைக்கு பின் விறுவிறுப்படைந்தது. தில்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடுகின்றன.

ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. பாஜக ஏழு தொகுதிகளிலும் களத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com