வாரணாசியில் இன்று பிரியங்கா காந்தி வீதி பிரசாரம் !

வாரணாசியில் இன்று (மே 25) பிரியங்கா காந்தியும் டிம்பிள் யாதவும் இணைந்து வீதி பிரசாரம் செய்யவுள்ளனர்.
வாரணாசியில் இன்று பிரியங்கா காந்தி வீதி பிரசாரம் !

வாரணாசி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அஜய் ராய்யை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவும் இன்று (மே 25) வீதி பிரசாரம் செய்யவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு துர்காகுண்ட் கோயிலில் இருந்து தொடங்கும் வீதி பிரசாரம் ரவிதாஸ் கோயிலில் நடைபெறும் பூஜைக்குப் பின்னர் நிறைவடையும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷைலேந்திர சிங் கூறியுள்ளார். மேலும் காசி ஹிந்து பல்கலைக்கழத்தில் உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு இருவரும் மரியாதை செலுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் இருவரும் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னர் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லவுள்ளதாக வாரணாசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராகவேந்திர செளபே கூறியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த நிகழ்வு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்திருக்கிறார். இந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக அதர் ஜமால் லாரி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com