தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்: மேனகா காந்தி

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக எம்பி மேனகா காந்தி கூறியுள்ளார்.
மேனகா காந்தி
மேனகா காந்தி(கோப்பு படம்)
Published on
Updated on
1 min read

மக்களவையில் 9-வது முறையாக பதவியேற்கும் முனைப்பில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் சுல்தான்பூரில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குச் சென்று சனிக்கிழமை பார்வையிட்டார்.

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மேனகா காந்தி கூறுகையில், "மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இரண்டு, மூன்று இடங்களில் சிறிய சிக்கல்கள் இருக்கிறது.

ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எங்கள் முகவர்களுக்கும் தெரியாது. அது சில சமயங்களில் வெற்றிகரமாகவும் சில சமயங்களில் இல்லாததை போல. நான் ஜோதிடம் சொல்பவர் அல்ல. ஆனால், ஜூன் 4-ஆம் தேதி வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்" என்றார்.

மேனகா காந்தி
நாட்டு மக்களே! உங்கள் வாக்கு ஜனநாயகத்தை காப்பாற்றும்: ராகுல் காந்தி

சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 8 முறையும், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறையும், பாஜக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் பிகாரில் 8 இடங்களும், ஹரியாணாவில் 10 இடங்களும், ஜம்மு காஷ்மீரில் ஒரு இடமும், ஜார்க்கண்டில் 4 இடங்களும், தில்லியில் 7 இடங்களும், ஒடிாசாவில் 6 இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 14 இடங்களும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களும் அடங்கும். மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com