வறுமை: குழந்தையை விற்க முயன்ற பழங்குடியினப் பெண்!

தம்பதியரிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை தாயுடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
வறுமை: குழந்தையை விற்க முயன்ற பழங்குடியினப் பெண்!
Published on
Updated on
1 min read

திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண் ஒருவர், வறுமை காரணமாக தனக்கு பிறந்த பெண் குழந்தையை விற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி திரிபுரா என்பவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கணவர் இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்ததால் கணவரின் இறப்புக்கு பிறகு கடும் வறுமையில் இருந்த அந்த பெண், தனக்கு குழந்தை பிறந்த அடுத்த நாளே ஹெஜமாராவில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ. 5,000-க்கு விற்றுள்ளார்.

இதுகுறித்து துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் அரிந்தம் கூறுகையில்,

வறுமை: குழந்தையை விற்க முயன்ற பழங்குடியினப் பெண்!
மைசூருவில் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு ரூ.80 லட்சம் பாக்கி! யார் கொடுப்பார்கள்?

மோர்மதி திரிபுரா நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்துவதற்காக தனது குடும்ப ரேஷன் கார்டையும் அடமானம் வைத்துள்ளார். அவர் கருவை கலைக்க விரும்பி, மருத்துவரிடம் ஆலோசனை செய்துள்ளார். ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்தி, மருத்துவர் கடந்த சில மாதங்களாக அவருக்கு தேவையான மருந்துகளை வழங்கி உதவினார்.

இந்த நிலையில், குழந்தையை விற்ற தம்பதியரிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தையை தாயுடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளருமான ஜிதேந்திர சௌத்ரி தலைமைச் செயலாளரிடம் கூறுகையில்,

ஆளும் பாஜக அரசு மற்றும் திப்ரா மோதா தலைமையிலான திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில், துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவி வழங்கத் தவறியுள்ளது. பழங்குடியினர் பகுதிகளில், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இதுபோன்ற துயரங்கள் நடக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com