
தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(மே 28) காலை தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, பயணிகள் உடனடியாக அவசரகால கதவுகள் வழியாக இறக்கிவிடப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விமானம் தனி இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விமானம் விரிவான சோதனைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் விபத்து ஏதுமின்றி அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.