ம.பி.யில் 66 செவிலியா் கல்லூரிகள் மூடல்: ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி
ம.பி.யில் 66 செவிலியா் கல்லூரிகள் மூடல்: ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள 66 செவிலியா் கல்லூரிகளை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டது. மாநில உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு செவிலியா் கல்லூரிகளில் முறையாக உள்கட்டமைப்பு வசதி இல்லாததாகவும் அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, அந்த மாநில முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 31 மாவட்டங்களில் உள்ள 66 செவிலியா் கல்லூரிகளை மூட முதல்வா் மோகன் யாதவ் உத்தரவிட்டாா். மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் எவ்வித பாதிப்புமின்றி தோ்வில் பங்கேற்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா். மூடப்படவுள்ள கல்லூரிகளின் பட்டியலை மருத்துவக் கல்லூரி ஆணையம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கல்லூரிகளின் உரிமம் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் ஊழல் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பல்வேறு குழுக்களை சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அமைத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள செவிலியா் கல்லூரிகளில் அதிகாரிகள் சோதனையிட சென்றபோது தங்களுக்குச் சாதகமான அறிக்கையை தயாரிக்குமாறு கல்லூரி நிா்வாகத்தினா் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் தருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...