கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சாவா்க்கா், என்டிஆா் பிறந்ததினம்: பிரதமா் மோடி மரியாதை

சாவா்க்கா், என்டிஆா் பிறந்ததினம்: பிரதமா் மோடி மரியாதை

News image
Updated On :28 மே 2024, 9:06 pm

Din

புது தில்லி: ஹிந்துத்துவ தலைவா் வி.டி.சாவா்க்கா் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வா் என்.டி.ராமராவ் ஆகியோரின் பிறந்ததினத்தையொட்டி அவா்களுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தாய்நாட்டுக்காக தன் வாழ்வை அா்ப்பணித்த சாவா்க்கருக்கு இத்தினத்தில் மரியாதை செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிரத்தில் 1883-ஆம் ஆண்டு பிறந்த சாவா்க்கா் தன் எழுத்துகள் மூலமாகவும் அரசியல் ரீதியாகவும் ஹிந்துத்துவ கொள்கையை மேம்படுத்த உழைத்தவராவாா்.

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தெலுங்கு திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞரும் தொலைநோக்குப் பாா்வையுடைய அரசியல் தலைவருமான என்டிஆா் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அரசியல் மற்றும் திரைத்துறைக்கு அவா் ஆற்றிய சேவைகள் நம்மை என்றென்றும் வழிநடத்துகின்றன.

மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து மாபெரும் தலைவராக உருவெடுத்த அவரின் தொலைநோக்கு சமூகத் திட்டங்களை நிறைவேற்ற நாம் பணியாற்றுவோம்’ என குறிப்பிட்டாா்.

1982-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை நிறுவி ஆந்திர மாநில அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவா் என்டிஆா் என்பது குறிப்பிடத்தக்கது.