

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா கூறுகையில், ”இந்த மனு தவறான கட்டாய நோக்கங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேப்டன் தீபக் குமார் தாக்கல் செய்த இந்த மனுவில், மோடியும் அவரது உடந்தையாக இருந்தவர்களும், 2018 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு அபாயகரமான விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டு தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு மனுவில் இதுபோன்ற குறைகளை ஏற்க முடியாது.
இந்த மனுவில், தெளிவற்ற, ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் நிரம்பியுள்ளன. இந்த மனு தவறான, ஒருசார்புடைய நோக்கங்களால் ஆனது. முற்றிலும் அபத்தமானது. தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர் என்பதைக் காட்டுவதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரதமர் தவறான உறுதிமொழியை கூறியுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்றபோது, அதில் தனது அதிகாரத்தை செலுத்தி ஆதாரங்களை அழித்ததாக மோடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுவின் நோக்கம் அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால், தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் வேட்புமனுவையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கேப்டன் தீபக் குமாரின் விமானி உரிமம் மற்றும் அவரது சேவை பதிவு மதிப்பீடுகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.