கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஒடிஸாவில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 4 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 19 காலை 7 மணிமுதல் ஜூன் 1 மாலை 6.30 வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தடையை மீறி ஒடிஸாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒடிஸா மாநில தேர்தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

ஒடிஸாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் 4 கட்டங்களாக மே 13 முதல் ஜூன் 1வரை நடைபெற்று வருகின்றது. 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிஸாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக உள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 112, பாஜக 23, காங்கிரஸ் 9 தொகுதிகளில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com