அசாமைப் புரட்டிப்போட்ட ரீமெல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!

ஒருபக்கம் கோடைவெயில் சுட்டெரிக்கும் நிலையில், அசாமில் கனமழை, வெள்ளதால் லட்சக்கனக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமைப் புரட்டிப்போட்ட ரீமெல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!
Published on
Updated on
1 min read

குவஹாட்டி: அசாமில் ரீமெல் புயலுக்குப் பிறகு இடைவிடாது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து அங்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 28 முதல் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். நாகோன், கரீம்கஞ்ச், ஹைலகண்டி, மேற்கு கர்பி அங்லாங், கச்சார், ஹோஜாய், கோலாகாட், கர்பி ஆங்லிங் மற்றும் டிமா ஹசாவ் ஆகிய 9 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளுடன் இணைக்கும் பராக் பள்ளத்தாக்கின் காச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களின் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவின் லும்ஸ்லம் பகுதியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலை-6இன் 20 மீட்டர் நீளம் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, வாகனங்கள் செல்லமுடியாமல் சிக்கித் தவிக்கின்றன.

அசாமைப் புரட்டிப்போட்ட ரீமெல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!
இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்?

கச்சாரில் 1,12,246 பேர் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர், அதைத்தொடர்ந்து கரீம்கஞ்சில் 37,000 பேரும், ஹோஜாயில் 22,058 பேரும், ஹைலகண்டியில் 14,308 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 3238.8 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், 2,34,535 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரம்மபுத்திரா, பராக் ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல இடங்களில் அபாய அளவை தாண்டி பாய்கின்றன.

அசாமைப் புரட்டிப்போட்ட ரீமெல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!
சுட்டெரிக்கும் வெயிலுக்கு 42 பேர் பலி: தில்லியில் புழுதிப் புயல் வீசும்!

பாதிக்கப்பட்ட சுமார் 35,640 பேர் 110 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஹோஜாயில் 19,646 பேரும், கச்சாரில் 12,110 பேரும், ஹைலகண்டியில் 2,060 பேரும், கரீம்கஞ்சில் 1,613 பேரும் ஆவார்.

தென்மேற்குப் பருவமழை அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முன்னதாகவே பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு கோல்பாரா, போங்கைகான், சோனிட்பூர், பிஸ்வநாத், திப்ருகர், கரும்கஞ்ச், கச்சார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com