
கேரளத்தில் விஷு பம்பர் 2024 லாட்டரியின் முதல் பரிசான ரூ.12 கோடியை ஆலப்புழா பழவீடு பகுதியைச் சேர்ந்த விஸ்வம்பரன் வென்றுள்ளார்.
ஓய்வுபெற்ற மத்திய காவல் படை வீரரான விஸ்வம்பரன், சௌவுத் இந்தியன் வங்கியில் காவலராக பணிபுரிந்தார். வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்குபவர் என்பதால், அவர் ஒவ்வொரு மாதமும் 10 முதல் 20 சீட்டுகளை வாங்குவார்.
நேற்று இரவு வெற்றி பெற்றதை அறிந்த அவர், லாட்டரி சீட்டு விற்கப்பட்ட ஆலப்புழாவில் தனது சீட்டுகளை சரிபார்க்க முடிவு செய்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கும் விஸ்வம்பரன் இதுவரை 5,000 ரூபாய் வரை பரிசுப் பெற்றுள்ளார். இதற்காகவே வழக்கமாக மாதம் 500 ரூபாய் செலவழித்து வந்துள்ளார். கேரள விஷு பம்பர் லாட்டரியின் வெற்றியாளர்களை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கேரள லாட்டரி துறை அறிவித்தது. அதில் ஆலப்புழாவைச் சேர்ந்த விசி 490987 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்தது.
இந்த முறை விஸ்வம்பரன் வாங்கிய இரண்டு பம்பர் சீட்டுகளில், ஒரு சீட்டில் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இதுகுறித்து பேசிய விஸ்வம்பரன், "நான் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். ஆனால், பணத்தை எப்படி செலவிடுவது என்று நான் முடிவு செய்யவில்லை. எனது குழந்தைகளுக்கு கொடுப்பேன். ஏழைகளுக்கு உதவுவேன். முன்பு போல் குடிப்பதற்காக பணத்தை செலவிட மாட்டேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.