
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் சரக்கு ரயிலில் அடிபட்டு யானை ஒன்று உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், மேரமுண்டலி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிந்தா போகாரி பகுதியில் தண்டவாளத்தை யானை கூட்டம் அதிகாலை 2 மணியளவில் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் யானை ஒன்றின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் அந்த யானை உயிரிழந்தது. காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை யானைகள் நடமாட்டம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரயில் ஓட்டுநர் எச்சரிக்கையை புறக்கணித்ததாக வனத்துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், யானையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். தண்டவாளத்தில் இருந்து யானையின் சடலம் அகற்றப்படும் வரை ரயில் சேவைகள் அப்பகுதியில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.