பிரசாந்த் கிஷோர் உத்தியின்படி 10 மாநில அரசுகள்? ஆலோசனைக் கட்டணம் ரூ. 100 கோடி!

ஒரு தேர்தலுக்கு ஆலோசனை அளிப்பதன் மூலம் கட்டணமாகக் குறைந்தது ரூ. 100 கோடி பெறுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நாட்டில் பத்து மாநிலங்களில் உள்ள அரசுகள், தன்னுடைய உத்திகளின்படிதான் நடந்துகொண்டிருக்கின்றன என்று தேர்தல் ஆலோசகரும் ஜன் சுராஜ் (மக்கள் நல்லாட்சி) கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஒரு தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கும் அதிகமாகக் கட்டணம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

திமுக உள்பட பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் ஆலோசகராகச் செயல்பட்டுள்ள இவர், பிகாரில் புதிதாகக் கட்சி தொடங்கித் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

பிகாரில் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெலாகஞ்சில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: ``பிரசாரத்தை நடத்துவதற்குகூட என்னிடம் போதுமான பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? நான் பெறும் கட்டணம் குறித்து பிகாரில் ஒருவருக்குக்கூட தெரியாது.

நான் ஒரு தேர்தலுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம், குறைந்தது ரூ. 100 கோடிக்கும் மேலாகக் கட்டணமாக வசூலிப்பேன். வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் 10 அரசுகள் எனது ஆலோசனைகளின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன (எந்தெந்த மாநிலங்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை).

மேலும், ஏதேனும் ஒரு தேர்தலுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம், நான் மேலும் 2 ஆண்டுகளுக்கான பிரசாரத்திற்கு நிதியினை அளிக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

பிகாரில் நவம்பர் 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 4 தொகுதிகளில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com