கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
சில மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் டிஜிட்டல் கைது என்று கூறி, அவர்களை மிரட்டி, பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92,334 -க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்துள்ளன.
அப்பாவி பொதுமக்களின் மீது பொய்ப் புகார்களைக் கூறி, டிஜிட்டல் கைது செய்வதாகவும், பணம் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி, கொள்ளை சம்பவங்களில் மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும், குறிப்பாக கம்போடியா நாட்டில் உள்ள சீனாவுக்கு சொந்தமான சூதாட்ட விடுதிகளில் இருந்துதான் அதிகளவிலான மோசடி நடப்பதாகக் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: கூகுளுக்கு உலக ஜிடிபி-யைவிட அதிகத் தொகை அபராதம்!
இவர்கள் தங்களை காவல்துறை அதிகாரி, அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற உயர்மட்ட இந்திய நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
மாதத்திற்கு சுமார் ரூ. 214 கோடி மோசடி நடப்பதன் மூலம், கடந்த 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் பிரிவு தெரிவிக்கிறது.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தாலோ, சந்தேகத்துக்கிடமான அழைப்புகளைப் பெற்றாலோ, உடனடியாக 1930 அவசரகால ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். உடனடியாக தெரிவிப்பதன் மூலம், இழந்த பணத்தினை உடனடியாக பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி: இருவா் கைது
வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: இருவா் கைது

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி: 3 பேர் கைது!
டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ. 50 லட்சம் மோசடி: 3 போ் கைது
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



