வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆந்திரத்தில் கடல் விமானம் சோதனை ஓட்டம்! சந்திரபாபு நாயுடு பயணம்!

ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடக்கிவைத்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2024, 6:05 am

DIN

ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடக்கிவைத்தார்.

ஆந்திரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் கடல் விமானத்தை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று என்டிஆர் மாவட்டத்தில் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமானம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கிவைத்தார். விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இந்த நிகழவில் கலந்துகொண்டார். பின்னர் இருவரும் சோதனை ஓட்டத்தில் கடல் விமானத்தில் பயணித்தனர்.

சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு முன்னதாக செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'கடல் விமான சோதனைக்கு பயன்படுத்தப்படும் விமானம் கனடாவில் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் ஆறுகளில் விமானத்தை இயக்குவதில் சாத்தியக்கூறுகள் உள்ளன. நான் அமைச்சரான பிறகு, கடல் விமானத்தின் வழிகாட்டுதல்களை சிறிது மாற்றியமைத்தோம். இது தொழில்துறையினரின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

சாதாரணமாக விஜயவாடா முதல் ஸ்ரீசைலம் வரை சாலை வழியாகச் சென்றால் 8 மணி நேரம் ஆகும். கடல் விமானத்தின் மூலமாக 45 முதல் 50 நிமிடங்கள்தான் ஆகும்.

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இதனை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.