25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

இந்தியாவின் அங்கமாகவே ஜம்மு-காஷ்மீா் இருக்கும்: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு பதிலடி

இந்தியாவின் அங்கமாகவே ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இருக்கும் என்று ஐ.நா.வில் சுதான்ஷு திரிவேதி பாகிஸ்தானுக்கு பதிலடி அளித்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2024, 6:33 pm

Din

இந்தியாவின் அங்கமாகவே ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இருக்கும் என்று ஐ.நா.வில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி பாகிஸ்தானுக்கு பதிலடி அளித்தாா்.

அண்மையில் ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியா மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களைப் போல, தங்கள் சுதந்திரத்துக்காக பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீா் மக்கள் போராடி வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து இந்திய அரசு மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் அமைதியான தீா்வை காண ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்’ என்றாா்.

இதன் மூலம், ஐ.நா.வில் மீண்டும் ஜம்மு-காஷ்மீா் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.நா.வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சுதான்ஷு திவேதி எம்.பி. பேசுகையில், ‘அண்மையில் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி புதிய அரசை ஜம்மு-காஷ்மீா் மக்கள் தோ்வு செய்தனா். எனவே, ஜம்மு-காஷ்மீா் குறித்து பொய்களைப் பரப்பும் செயல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அந்தப் பொய்கள் உண்மை நிலவரத்தை மாற்றிவிடாது. ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருக்கும்’ என்றாா்.