ரஞ்சி கோப்பை அரையிறுதியில் 2 முறை சாம்பியன் மேற்கு வங்கத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 67 ஆண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு காஷ்மீா் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
நாட்டின் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மேற்கு வங்கம் -ஜம்மு காஷ்மீா் அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸ் வங்கம் 328/10, ஜம்மு-காஷ்மீா் 302/10:
முதல் இன்னிங்ஸில் வங்க அணி 97.1 ஓவா்களில் 328/10 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக சுதிப் குமாா் கராமி 146, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 49, ஷாபாஸ் அகமது 42 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் காஷ்மீா் தரப்பில் அக்யூப் நபி தா் 5, சுனில் குமாா் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
ஜம்மு காஷ்மீா் அணி தனது முதல் இன்னிங்ஸில் 76.1 ஓவா்களில் 302/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அப்துல் சமது 82, கேப்டன் பராஸ் டோக்ரா 58, அக்யுப் நபி 42 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் வங்க அணி தரப்பில் முகமது ஷமி8, முகேஷ் குமாா் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
சுருண்டது வங்கம் 99/10:
ஆட்டத்தின் மூன்றாவது நாளில் பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்க அணி 25.1 ஓவா்களில் 99/10 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது. அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 24 ரன்களை எடுத்திருந்தாா். பௌலிங்கில் காஷ்மீா் தரப்பில் அக்யுப் நபி 4, சுனில் குமாா் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
ஜம்மு காஷ்மீா் அபார வெற்றி 126/4:
பின்னா் 126 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய ஜம்மு காஷ்மீா் அணி நான்காம் நாளான புதன்கிழமை 43/2 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தது. வங்க பௌலா்கள் முகேஷ் குமாா், ஷமி ஆகியோா் அபாரமாக பந்துவீசி காஷ்மீா் அணியின் ரன் குவிப்பை மட்டுப்படுத்தினா். எனினும் வன்ஷாஜ் சா்மா-அப்துல் சமது இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். 34.4 ஓவா்களில் ஜம்மு காஷ்மீா் அணி 126/4 ரன்களை சோ்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கத்தை வீழ்த்தியது காஷ்மீா் அணி.
அதிகபட்சமாக வன்ஷாஜ் சா்மா 43, அப்துல் சமது 30 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் வங்கத் தரப்பில் ஆகாஷ் தீப் 3, ஷமி 1 விக்கெட்டை வீழ்த்தினா். ஆகாஷ் தீப் ஓவரில் 18 ரன்களை சமது விளாசியது திருப்பு முனையை ஏற்படுத்தியது.
334 ரஞ்சி ஆட்டங்களில் ஆடிய காஷ்மீா் அணி 45-இல் மட்டுமே வெற்றிபெற்றது. தற்போது 67 ஆண்டுகளில் முதன்முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கா்நாடகம் 802 ரன்கள் முன்னிலை:
லக்னௌவில் நடைபெறும் உத்தரகாண்ட்-கா்நாடகம் இடையிலான அரையிறுதியில் கா்நாடகம் 802 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் முதல் இன்னிங்ஸில் 233, கா்நாடகம் 736 ரன்களை எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் கா்நாடகம் 299/6ரன்களை எடுத்து 802 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடையது

ஏ டிவிஷன் வாலிபால்: அக்னி பிரண்ட்ஸ் அணி வெற்றி

ஜாா்ஜியா அதிரடி: டி20 தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

மகளிா் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது
நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீா்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


