குவைத் நாட்டின் அரசு அலுவலகங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளைக் குறிவைத்தும், அங்கிருக்கும் அமெரிக்காவின் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், குவைத் நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய அந்நாட்டு அரசு வளாகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என குவைத் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்களை, தற்காலிகமாக வீட்டிலிருந்து பணிபுரியுமாறும் குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, குவைத்தில் உள்ள மினா அல்-அஹமதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், ஆலை தீப்பற்றி எரிந்தது.
மேலும், குவைத்தில் 90 சதவிகித அளவில் கடல்நீர்தான் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், குவைத்தின் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
Summary
Iran Attacks Kuwaiti Government Offices!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த டிரம்ப்

ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



