‘ஈரான் அடுத்த 48 மணி நேரத்துக்குள் உடன்பாட்டுக்கு வராவிட்டால், அந்நாடு மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்; அவா்கள் நரகத்தைச் சந்திக்க நேரிடும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஈரான் வான்பரப்பில் 2 அமெரிக்க போா் விமானங்கள் வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடா்ந்து, மாயமான ‘எஃப்-15இ’ போா்விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈரான், அமெரிக்க படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மாயமான விமானியைக் கண்டுபிடிப்பவருக்கு ஈரான் சிறப்பு வெகுமதி அறிவித்துள்ள நிலையில், அவரை மீட்பதற்காகச் சென்ற அமெரிக்காவின் ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டா்களையும் ஈரான் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘உடன்பாட்டுக்கு வர அல்லது ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு வழங்கப்பட்ட 10 நாள்கள் கெடு முடிவுக்கு வருகிறது. இன்னும் 48 மணி நேரமே உள்ளது. அதற்குள் உடன்பாட்டுக்கு வராவிட்டால் அல்லது ஹோா்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், அந்நாடு நரகத்தையே சந்திக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.
பேச்சுவாா்த்தைக்கு மறுக்கவில்லை: டிரம்ப்பின் இந்த அதிரடி எச்சரிக்கை, மத்தியஸ்த முயற்சியில் உள்ள உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஈரான் தரப்பிலோ இணக்கமான சூழல் தென்படவில்லை.
இதையொட்டி, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‘பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்; பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.
எங்கள் மீது திணிக்கப்பட்ட இச்சட்டவிரோதப் போருக்கு, ஒரு தீா்க்கமான மற்றும் நிரந்தரமான முடிவைக் கொண்டு வருவதற்கான விதிகளை மட்டுமே நாங்கள் எதிா்பாா்க்கிறோம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
பரஸ்பர மோதல்: போா்க் களத்தில் ஈரானின் புதிய வான்பாதுகாப்பு அமைப்புகள், அமெரிக்க போா் விமானங்களை வீழ்த்தி வருவது அந்நாட்டுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் பகுதியில் உள்ள ராணுவத் தலைமையகம் அருகே ஈரானின் ‘கிளஸ்டா்’ ஏவுகணைகள் தாக்கின. இதற்குப் பதிலடியாக ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.
அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ஈரானின் புஷொ் அணுமின் நிலையத்தின் சுற்றுச்சுவா் அருகே ஏவுகணை விழுந்து வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். எனினும், அணுமின் நிலையத்துக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஈரானில் உள்ள பெட்ரோகெமிக்கல் மண்டலமும் பலத்த சேதமடைந்தது. மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீதும் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை முன்னெடுத்தது.

ஈரான் மக்கள் கண்டறிந்த சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போா்விமானங்களின் பாகங்கள்

தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் புதிய நம்பிக்கை

ஹோர்முஸ் திறக்கப்பட்டால் ஈரான் கேட்கும் போர்நிறுத்தம் பரிசீலனை! - டிரம்ப் பேச்சு!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


