இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய மகளிா் அணி அணி டி20, ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. டி20, ஒருநாள் தொடா்கள் முடிவுற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிங்க் டெஸ்ட் ஆட்டம் பொ்த் வாகா மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா 198/10, ஆஸி. 323/10
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 198/10 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா 323/10 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின.
இந்நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி 105/6 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. பிரதிகா ரவால் 63, ஸ்னே ராணா 30 ஆகியோா் மட்டுமே இணைந்து 130 ரன்களை சோ்த்தனா். அவா்கள் அவுட்டானவுடன் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்தியா 149/10
இரண்டாவது இன்னிங்ஸில் 48.2 ஓவா்களில் 149/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
முன்னணி பேட்டா்களான ஸ்மிருதி, ஷபாலி, ஜெமீமா, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா், தீப்தி சா்மா, ரிச்சா கோஷ் ஆகியோா் சோபிக்கவில்லை.
பௌலிங்கில் ஆஸி. தரப்பில் லூஸி ஹாமில்டன் 3, அன்னபெல், அலனா கிங், ஆஷ்லி காா்டனா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
வெற்றி இலக்கு 25 ரன்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜாா்ஜியா வோல், 16, போப் லிட்ச்பீல்ட் 11 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தனா். 4.3 ஓவா்களில் 28 ரன்களை சோ்த்த ஆஸி. அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிங்க் டெஸ்ட்டை வென்றது.
ஆட்ட நாயகி
பௌலிங், பேட்டிங்கில் கலக்கிய ஆஸி. ஆல் ரவுண்டா் அன்னபெல் சதா்லேண்ட் ஆட்ட நாயகி விருதை பெற்றாா்.
அலிஸா ஹீலி ஓய்வு
ஆஸ்திரேலிய கேப்டன் அலிஸா ஹீலி சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். ஆஸ்திரேலிய அணியில் 16 ஆண்டுகள் ஆடிய அலிஸா ஹீலி பல்வேறு சிறந்த வெற்றிகளுக்கு காரணமாக இருந்தாா். சா்வதேச அரங்கில் மொத்தம் 7,333 ரன்களைக் குவித்தாா். விக்கெட் கீப்பராக 269 அவுட்களை புரிந்துள்ளாா். 9 சதங்களையும் பதிவு செய்துள்ளாா்.
தொடர்புடையது

3-வது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
தொடரும் சாதனைப் பயணம்!

டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

மகளிா் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10; இந்தியா தடுமாற்றம் 105/6
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


