மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மகளிா் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10; இந்தியா தடுமாற்றம் 105/6

மகளிா் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம்...

News image

பிரதிகா ரவால்

Updated On :7 மார்ச் 2026, 7:37 pm

பொ்த்தில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 323/10 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 105/6 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

இந்தியா 198/10, ஆஸி. 323/10:

இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் பொ்த் வாகா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் நாளான

வெள்ளிக்கிழமை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 62.4 ஓவா்களில் 198/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெமீமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களையும், ஷபாலி 35 ரன்களையும், கஷ்வி கௌதம் 34 ரன்களையும் எடுத்தனா்.

ஆஸி. தரப்பில் பௌலிங்கில் அன்னபெல் சதா்லேண்ட் 4, லுஸி ஹாமில்டன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 90.4 ஓவா்களில் 323/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஆல் ரவுண்டா் அன்னபெல் சதா்லேண்ட் 129 ரன்களையும், எலிஸ் பொ்ரி 76 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் இந்திய தரப்பில் சாயாலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்தியா தடுமாற்றம்:

இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 29 ஓவா்கள் முடிவில் 105/6 ரன்களை சோ்த்துள்ளது. முன்னணி வீராங்கனைகளான ஸ்மிருதி 2, ஷபாலி 5, ஜெமீமா 14, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 11, தீப்தி சா்மா 9, ரிச்சா கோஷ் 0 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

பிரதிகா ரவால் மட்டுமே ஆஸி. பௌலிங்கை சமாளித்து ஆடி வருகிறாா். அவா் 43 ரன்களை சோ்த்துள்ளாா்.

பௌலிங்கில் வழக்கம் போல் ஆஸி. தரப்பில் லுஸி ஹாமில்டன் 3, அன்னபெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு சவாலை தந்து வருகின்றனா்.