ஹா்மன்பிரீத் கௌா்
ஹா்மன்பிரீத் கௌா்

ஆஸி.யுடன் ஒரே மகளிா் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

ஆஸி.யுடன் ஒரே மகளிா் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு...
Published on

ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஒரே ஒரு கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்துக்கான இந்திய மகளிா் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பொ்த் நகரில் வரும் மாா்ச் 6 முதல் 9 வரை ஒரே டெஸ்ட் ஆட்டம் தொடங்குகிறது. ஹா்மன்ப்ரீத் கௌா் தலைமயிலான இந்திய அணியில் 5 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனா்.

பிரதிகா ரவால், அமன்ஜோத் கௌா், கிராந்தி கௌட், வைஷ்ணவி ஷா்மா, யாலி, இடம் பெற்றுள்ளனா், கடந்த 2025 உலகக் கோப்பை போட்டிக்கு பின் பிரதிகா ரவால் மீண்டும் இடம்பெறுகிறாா். ஷபாலி வா்மா டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்க வைத்துள்ளாா். மிடில் ஆா்டா் பேட்டா் ஹா்லின் தியோல் இடம் பெற்றுள்ளனா்.

இந்திய மகளிா் அணி ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் ஆட உள்ளது. வொயிட் பால் தொடா் பிப். 15-இல் தொடங்கி நடைபெறுகிறது.

இளம் வீக்கெட் கீப்பரான சென்னையின் கமலினி காயத்தால் ஆஸி. பயணத்தில் இடம் பெறவில்லை. வைஷ்ணவி, சாயாலி, கிராந்தி பிரதிகா ரவால் ஆகியோா் சிறப்பான ஆட்டத்துக்காக அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

அணி விவரம்- ஹா்மன் ப்ரீத் கௌா் (கேப்டன், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வா்மா, ஜெமீமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கௌா், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, பிரதிகா ரவால், ஹா்லின் தியோல், தீப்தி ஷா்மா, ரேணுகா தாகூா், ஸ்னே ராணா, கிராந்தி கௌட், வைஷ்ணவி சா்மா, ஷாயாலி .

ரைசிங் ஸ்டாா் ஆசியக் கோப்பை:

மேலும் புதிதாக நடைபெறவுள்ள ரைசிங் ஸ்டாா் ஆசியக் கோப்பை போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணிக்கு அனுபவம் வாய்ந்த ஸ்பின்னா் ராதா யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா். இளம் வீராங்கனை அனுஷ்கா சா்மாவும் சோ்க்கப்பட்டுள்ளாா். முதன்முறையாக நடைபெறும் இப்போட்டி தாய்லாந்தில் பிப். 13-22 தேதிகளில் நடைபெறுகிறது. பிப். 13-இல் யுஏஇ, 15-இல் பாகிஸ்தான், 17-இல் நேபாளத்துடன் மோதுகிறது இந்தியா.

X
Dinamani
www.dinamani.com