
மகாராஷ்டிரத்தில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் பல்கர் மாவட்டத்தில் ரூ. 3.70 கோடிக்கும் அதிகமான பணம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதையொட்டி எல்லை பகுதிகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடக்கம்!
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் பல்கர் மாவட்டத்தில் வேனில் பணம் கொண்டுசெல்லப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார், வாடா பகுதியில் வேனில் இருந்த ரூ. 3.70 கோடிக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
ஓட்டுநர் பணத்தைக் கொண்டு செல்வதற்குத் தேவையான சரியான ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.