
உத்தரப் பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியான நிலையில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் சந்தீப் என்பவர், தனது குடும்பத்தினர், உறவினர் உள்பட 20 பேருடன் சேர்ந்து பேருந்தில் மதுராவுக்கு சென்றுவிட்டு, லக்னோவுக்கு திரும்பியுள்ளனர். அந்த சமயத்தில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் ஆக்ரா - லக்னௌ நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சந்தீப்பின் மனைவி, மகள், மகன் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தபோதிலும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் விரைந்தார். மேலும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பரபரப்பை ஏற்படுத்தும் டிரம்ப் - எலான் - ஸெலென்ஸ்கி உரையாடல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.