

உத்தரப் பிரதேசத்தில் குள்ளநரி தாக்கியதில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜுகைல் கிராமத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குள்ளநரி தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரி அவதேஷ் குமார் சிங் கூறுகையில், கிராமத் தலைவரின் ஆரம்ப தகவலின்படி, குள்ளநரி ஒன்று அப்பகுதியில் பலரைத் தாக்கியதாகக் தெரிய வந்துள்ளது.
எனினும், விரிவான தகவல்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்குச் சென்று நிலைமையை மதிப்பிட்டு குள்ளநரியைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சோபனில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றார்.
இதனிடையே தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அமர் சிங் (30), பூல்மதி (20), கோலு (11), சந்தீப் (10), குட்டி (30), பச்சா தேவி (60), ராமதர் (19), அங்குஷ் (5) மற்றும் ஷப்னம் (25) ஆகியோர் ஜுகைல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என சோபன் சுகாதார மைய கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.