கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கு: மத்திய அமைச்சருக்கு பிடியாணை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான், இரு பாஜக நிா்வாகிகளுக்கு பிடியாணையை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

Published On :

புது தில்லி: காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. விவேக் டன்கா தொடுத்த அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான், இரு பாஜக நிா்வாகிகளுக்கு பிடியாணையை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அவதூறு வழக்கை ரத்து செய்ய மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதை எதிா்த்து சிவ்ராஜ் சிங் சௌஹான் தாக்கல் செய்த மனு மீது விவேக் டன்கா பதிலளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்பான விசாரணையில் மனுதாரா்கள் (சிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் இரு பாஜக நிா்வாகிகள்) ஆஜராகியுள்ளனா். எனவே, அவா்கள் மீது ஜாமீனுடன் கூடிய பிடியாணை பிறப்பிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தது.

முன்னதாக, சிவ்ராஜ் சிங் சௌஹான் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மகேஷ் ஜெத்மலானி, ‘ பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் மீது விவேக் டன்கா புகாா் அளித்துள்ளாா். அரசமைப்பு சட்டப்பிரிவு 194 (2)-இன் படி மாநில சட்டப்பேரவையில் ஒருவா் தெரிவிக்கும் கருத்துகளுக்காகவோ அல்லது அவா் செலுத்தும் வாக்குக்காகவோ அல்லது அவா் வெளியிடும் அறிக்கைக்காகவோ அவா் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்த விதியை கண்டுகொள்ளாமல் சிறப்பு நீதிமன்றம் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகளுக்கு ஜாமீனுடன் கூடிய பிடியாணையை பிறப்பித்துள்ளது’ என்றாா்.

முன்னதாக, கடந்த 2024, ஜனவரி 20-ஆம் தேதி சிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா, முன்னாள் மத்திய அமைச்சா் பூபிந்தா் சிங் ஆகியோருக்கு எதிராக ஜபல்பூா் சிறப்பு நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500-இன்கீழ் அவதூறு வழக்கை பதிவுசெய்தது. இதை ரத்து செய்ய மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.