ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜார்க்கண்டின் உரிமைகளை அவர்கள் பறித்து விட்டனர்: பிரதமர் மோடி!

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் விரும்புவதாகவும் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

News image
ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி- பிடிஐ
Updated On :13 நவம்பர் 2024, 2:08 pm

DIN

ஜார்க்கண்டில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் மக்களின் உரிமைகளை காங்கிரஸ் அபகரித்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்.

ஜார்கண்ட்டில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, ``ராகுல் காந்தி எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது தந்தை ராஜீவ் காந்தி, காங்கிரஸின் தலைவராக இருந்தபோது, இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, அவர் தேர்தலில் மோசமான தோல்வியடைந்தார்.

அன்றிருந்து இன்று வரை, காங்கிரஸ் ஒருபோதும் மத்திய அரசில் முழுமையான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இன்றும்கூட, எஸ்சி, எஸ்டி, ஓபிசியினர் பெரும்பான்மையான மாநிலங்களில், காங்கிரஸ் முற்றிலுமான தோல்வியைக் கண்டுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் மூவருமே, தங்கள் சொந்தக் குடும்பங்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளன. தங்கள் குடும்பம் எவ்வாறு பயனடையும் என்பதைப் பற்றி சிந்திப்பதில் மட்டுமே, அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் இருவருமே, உங்களின் தண்ணீர், காடுகள், நிலங்கள், மண்வளம், நிலக்கரி, வேலைவாய்ப்புகளையும் திருடி விட்டனர்.

பெண்கள் மீது அவதூறு கருத்துகளைக் கூறுவதன்மூலம், அவர்களின் மீதான பாதுகாப்பின்மையை காங்கிரஸினர் பரப்புகின்றனர். தங்களைப் பாதுகாக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு இருக்கும் தைரியத்தில்தான், அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் பழங்குடிப் பெண்களையும் அவமதித்து வருகின்றனர். பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, அவரைத் தோற்கடிக்க, காங்கிரஸ் தங்களால் முடிந்தவரையில் முயற்சி செய்தனர். இன்றும் வரையிலும்கூட, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவர்கள் அவமதிக்கின்றனர்.

உணவு, பெண்கள், நிலம் ஆகியவைதான் ஜார்க்கண்டில் பிரச்னையாக இருந்து வருகிறது. அவற்றை தேசிய ஜனநாயகக் கூட்டணி பாதுகாக்கும் என்று உறுதியளிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும், ஜார்க்கண்டில் கடந்த வாரம் நடைபெற்ற பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, ``பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டு வரம்பைக் குறைத்து, அதன்மூலம் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக இருக்கும் வரை, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காது என்று ராகுலை எச்சரிக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.