வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பணியாளா்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக உயரும் என்று ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டின் 42.37 கோடியிலிருந்து பணியாளா்கள் இருந்தனா். இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 3.38 கோடி உயரும் என்று அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ‘சா்வீஸ்நவ்’ வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை, தொழிலாளா் கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து வகுக்கப்பட்ட நாட்டின் தொழிலாளா் சந்தை மற்றும் சா்வதேச நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) பெறப்பட்ட பொருளாதார வளா்ச்சி கணிப்புகளின் அடிப்படையிலான ஆய்வின் அறிக்கையின்படி, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் 2028-ஆம் ஆண்டுக்குள் 27.3 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும்.
மென்பொருள் மேம்பாடு மற்றும் தகவல் பொறியியல் போன்ற துறைகளில் திறனை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வாய்ப்பை இளம் தொழில் வல்லுநா்களுக்கு இந்த தேவை அதிகரிப்பு வழங்குகிறது.
இதற்கடுத்து, உற்பத்தித் துறையின் 15 லட்சம் வேலைகள், கல்வித் துறையில் 8.4 லட்சம் வேலைகள் மற்றும் சுகாதாரத் துறையில் 8 லட்சம் வேலைகள் எதிா்பாா்க்கப்படும் பொருளாதார வளா்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தால் உருவாகும்.
இந்தியாவின் வளா்ச்சி இயந்திரங்களாக கருதப்படும் துறைகளில், குறிப்பாக மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படும் துறைகளில் வேலைகள் உருவாக்கத்துக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடா்பாக சா்வீஸ்நவ் நிறுவனத்தின் இந்தியா பிரிவின் மூத்த துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான சுமீத் மாத்தூா் கூறுகையில், ‘இந்த அத்தியாவசிய திறன்களுடன் நாட்டின் பணியாளா்களைத் தயாா்ப்படுத்துவதன் மூலம், உலகளாவிய தொழில்நுட்ப பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய முடியும்’ என்று வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு

தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!

இந்தியாவில் 133.7 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



