மணிப்பூரில் பாஜக ஆதரவை திரும்பப் பெற்றது தேசிய மக்கள் கட்சி!
மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் கே. சங்மா அறிவித்துள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், முதல்வர் பிரைன் சிங் தலைமையிலான பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ள கன்ராட் சங்மா,
நெருக்கடியை தவிர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் பிரேன் சிங் ஆட்சி முழுமையாக தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, தேசிய மக்கள் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக திரும்பப் பெற முடிவு செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜக மட்டும் 32 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளதால் மாநிலத்தில் பாஜகவின் ஆட்சிக்கு இதன்மூலம் பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.