தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.

மகாராஷ்டிரத்தில் காங். தலைவர்கள் இறுத்திக்கட்ட தேர்தல் பிரசாரம்
தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.
PTI
Published on
Updated on
1 min read

தாராவி நிலத்தை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பதிவுகள் அமைந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் நவ.20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) இணைந்துள்ள ‘மகா யுதி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று(நவ. 18) மாலையுடன் ஓய்ந்தது.

இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இன்று தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார மையப்புள்ளியாக தாராவி நிலம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

தேர்தல் பிரச்சார களத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளதாவது, “தாராவியில் சாமானிய மக்களுக்கு சொந்தமான, சிறு தொழில் நிறுவனங்களுக்கான, ரூ. 1 கோடி மதிப்பிலான நிலம், அதானிக்கு மோடி அவர்கள் மற்றும் அவரது அரசால் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மக்கள் இத்தகைய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்கு செலுத்துவர்.

மோடி அவர்கள் அதானிக்கு கடன் வழங்கியுள்ளார். சாமானிய மக்கள் தங்கள் பணத்தை வரவு வைக்கும் வங்கிகளிருந்தே அதானிக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தியே, அதானி சாமானிய மக்களின் சொத்துகளை விலைக்கு வாங்கி வருகிறார்.

மும்பைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அவர்கள், நாட்டின் வளம் பெருக தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். அப்படியிருக்கையில், நாட்டின் வளம் பெருக மிகப்பெரியளவில் பங்களிப்பை வழங்குவது ஏழைகளும், சிறு தொழிலதிபர்களும், வணிகர்களும், தொழிலாளர்களும்தான், மோடி அவர்களின் முதலாளித்துவ தோழர்களிடமிருந்து இது கிடைப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு முடிந்ததும், சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய நாளில், எந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்பதற்கான விடை தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com