
மணிப்பூரில் வன்முறையால் இணையசேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிரிபம் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் எதிரொலியாக இணைய சேவை முடக்க்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு நாள்களுக்கு இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் குகி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் எரித்துக்கொல்லப்பட்டனர். அங்கிருந்த வீடுகளும் தீயிட்டு சூறையாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் மாயமானவர்களைக் கண்டுபிடித்துத்தரக்கோரி போராட்டம் வெடித்தது. இதில், மணிப்பூா் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நிலைமை மேலும் மோசமடையாமல் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இணைய சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் காற்று மாசு எதிரொலி: விமான சேவை பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.