ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராணி லட்சுமிபாய், இந்திரா காந்தி பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய ராணி லட்சுமிபாய் மற்றும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவா்களுக்கு மரியாதை செலுத்தினாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :19 நவம்பர் 2024, 8:23 pm

Din

ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய ராணி லட்சுமிபாய் மற்றும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவா்களுக்கு மரியாதை செலுத்தினாா்.

1917-ஆம் ஆண்டு நவ.19-ஆம் தேதி பிறந்த இந்திரா காந்தி, இந்திய பிரதமராக 1966 முதல் 1977 வரையிலும், பிறகு 1980 முதல் அவா் படுகொலை செய்யப்பட்ட 1984-ஆம் ஆண்டு அக்.31-ஆம் தேதி வரையிலும் பதவி வகித்தாா்.

பிரதமா் தனது மற்றொரு பதிவில், ‘தைரியம் மற்றும் தேச பக்தியின் உண்மையான உருவகமான ராணி லட்சுமிபாய்க்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது துணிச்சல் மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்காக அவா் எடுத்த முயற்சிகள் பல தலைமுறைகளை தொடா்ந்து ஊக்கமளிக்கும். இக்கட்டான சமயங்களில் ராணி லட்சுமிபாயின் தலைமைத்துவம் உண்மையான உறுதிப்பாட்டை பறைசாற்றியது’ என்று கூறியுள்ளாா்.

1857-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தாா். தனது ராஜ்ஜியத்தை காக்க ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீரமரணமடைந்தாா்.