இந்தியாவில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை, அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பேரவைத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளம், சத்தீஸ்கர், மேகாலயம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. பதிவான வாக்குகள் ஒரே நாளில் எண்ணப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவ. 6 ஆம் தேதி அதிகாலை முதலே எண்ணப்பட்டு, இன்று (நவ. 24) வரையில் எண்ணிக்கை தொடரப்பட்டு வருவதை டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
எலான் மஸ்க், தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``இந்தியாவில் ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால், கலிஃபோர்னியாவில் இன்னும் எண்ணப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
India counted 640 million votes in 1 day.
— Elon Musk (@elonmusk) November 24, 2024
California is still counting votes ð¤¦ââï¸ https://t.co/ai8JmWxas6
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவ. 5 ஆம் தேதி மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவுற்றவுடனேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டு, அதிக வாக்குகளைப் பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சில மாகாணங்களில் இன்று வரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கையில் தாமதம் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் கூறுவதாவது, ``மற்ற மாகாணங்களைவிட கலிஃபோர்னியாவில்தான் அதிகப்படியான வாக்குகள் (16 மில்லியனுக்கும் அதிகமாக) பெறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் மின்னஞ்சல் வாக்குகள்தான் எண்ணிக்கையைத் தாமதப்படுத்துகின்றன.
2004 ஆம் ஆண்டு தேர்தலில் 67 சதவிகித வாக்காளர்கள் நேரில் வாக்களித்தனர்; ஆனால், இந்தாண்டு தேர்தலில் 90 சதவிகித வாக்காளர்கள் மின்னஞ்சல் மூலம் வாக்களித்தனர். சிலர் அஞ்சல் மூலமாகவும் வாக்களிப்பர். இந்த அஞ்சல் வாக்குகளில் சிலர் கையொப்பத்தை மறந்துவிடுவது, தவறான இடத்தில் கையொப்பமிடுவது, சரியான உறையில் தங்கள் வாக்குச்சீட்டை இணைக்காதது போன்ற பிழைகளால் வருவதாலும் தாமதமாகின்றன.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!
இவ்வாறான பிழையுள்ள வாக்குச் சீட்டுகளைச் சரிசெய்ய டிசம்பர் 1 ஆம் தேதி வரையில் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அந்தந்த வாக்காளர்களை கண்டுபிடிப்பது கடினமானாலும், செய்யத்தான் வேண்டியிருக்கிறது.
மேலும், சனிக்கிழமை (நவ. 23) நிலவரப்படி, 1,29,286 வாக்குச் சீட்டுகளில் பிழைத் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஃபுளோரிடாவில் 25 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களித்தனர். மேலும், அதன் முடிவுகள் தேர்தல் நாள் இரவிலேயே 99 சதவிகிதம் வரையில் எண்ணப்பட்டு விட்டன’’ என்று தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!
ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்
அம்பானி வாழ்நாள் சொத்துமதிப்பை ஒரே நாளில் சம்பாதித்த எலான் மஸ்க்!

உலகின் முதல் டிரில்லியனரான எலான் மஸ்க்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



