
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக்கட்சி கூட்டம் தில்லியில் தொடங்கியது.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
நாளை முதல் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி தில்லியில் இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இத்துடன், குளிா்கால கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும் மசோதாக்கள், அரசியல் கட்சிகளால் எழுப்பப்படும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வக்ஃப் திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் தொடர்பான மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
அதானி மீதான அமெரிக்கா அதிகாரிகளின் லஞ்ச புகார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீா்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.