
மணிப்பூரில் மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக மணிப்பூரில் 9 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. ஓராண்டுக்கு மேலாகியும் இரு தரப்பினரிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.
மணிப்பூரின் வடகிழக்குப் பகுதியில் நவ. 11ஆம் தேதி இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கிளர்ச்சியாளர்கள் கடத்திச்சென்றனர். அவர்களை மீட்கக் கோரி மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் நவ. 16ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரின் பதற்றமான பகுதிகளில் மாநில அரசு சார்பில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இதனை மேலும் ஒரு நாள்களுக்கு நீட்டிப்பதாக மாநில உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி நவ. 27ஆம் தேதி வரை மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், காக்சிங், பிஷ்னுபூர், தோபல், சுரசந்த்பூர், ஜிரிபம் உள்ளிட்ட 9 பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.