New parliament
நாடாளுமன்றம்ANI

மக்களவையில் டிஜிட்டல் வருகைப் பதிவேடு!

மக்களவை உறுப்பினர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்ய நாடாளுமன்ற வளாகத்தில் டிஜிட்டல் பதிவேடு முறை பின்பற்றப்படுகிறது.
Published on

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று (நவ.25) தொடங்குகிறது. இதில், மக்களவை உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் வருகையைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் நாடாளுமன்றத்தை காகிதமற்ற முறைக்கு மாற்ற இதற்கென மின்னணு டேப்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பழைய முறையிலான வருகைப் பதிவேட்டு முறையும் கவுண்டர்களில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் தங்களது வருகையைப் பதிவுசெய்து காகிதமற்ற நாடாளுமன்றத்தை உருவாக்க உதவுமாறு அறிவுறுத்தப்படுகிறது” என மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

மக்களவை உறுப்பினர்கள் டேப் மெனுவில் உள்ள தங்களது பெயர்களைத் தேர்ந்தெடுத்து டிஜிட்டல் பேனா மூலம் கையெழுத்திட்டு, அதனை சமர்ப்பித்தால் வருகைப் பதிவு செய்யப்படும் என்றும் இதற்கென தொழில்நுட்ப உதவிக்காக தேசிய தகவல் மையத்தின் பொறியாளர்கள் ஒவ்வொரு கவுண்டர்களிலும் இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் கூடும் போது, உறுப்பினர்கள் தங்களின் தினசரி உதவித்தொகையைப் பெறுவதற்கு பதிவேட்டில் தங்களின் வருகையை குறிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் மொபைல் ஆப் வசதி மூலம் வருகைப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com