'சோசலிச', 'மதச்சார்பற்ற' சொற்கள் அரசியலமைப்பு முகப்புரையில் இருக்கும்: உச்சநீதிமன்றம்

சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் அரசியலமைப்பு முகப்புரையிலிருந்து நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசியலமைப்பு முகப்புரை / உச்சநீதிமன்றம்
அரசியலமைப்பு முகப்புரை / உச்சநீதிமன்றம்
Published on
Updated on
1 min read

சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் அரசியலமைப்பு முகப்புரையிலிருந்து நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று (நவ. 25) தள்ளுபடி செய்தது.

1976ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது அரசியலமைப்பின் முகப்புரையில், சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய சொற்களை சேர்ப்பதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதனை எதிர்த்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் மீதான தீர்ப்பை நவ. 22ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அரசியலமைப்பு முகப்புரையில் உள்ள சில சொற்களை மாற்றக்கோரி, கடந்த 2020ஆம் ஆண்டு பல்ராம் சிங் என்பவரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் முகப்புரை சொற்களை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட முதல் மனு இதுவாகும்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (நவ. 25) தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில், இந்தியாவில் சோசலிசம் என்பது சமத்துவம் பேணும் அரசை குறிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பு முகப்புரையில் இறையாண்மை, ஜனநாயகக் குடியரசு ஆகிய சொற்களுக்கு பதிலாக இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு ஆகிய சொற்கள் சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 368-ன் கீழ், அரசியல் சாசன முன்னுரையில் சோசலிசம், மதச்சார்பற்ற என்ற சொற்கள் சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் சாசன முன்னுரையில் திருத்தம் மேற்கொள்ள சட்டப் பிரிவு 368 அதிகாரம் அளிக்கிறது.

இந்த பிரிவின் கீழ் அரசியல் சாசன முன்னுரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த மனுக்கள் மீது மேலும் விசாரணை தேவையில்லை எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், சட்டத் திருத்தங்கள் செய்யும் நாடாளுமன்றத்துக்கான அதிகாரம் அரசியலமைப்பு முகப்புரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாகத் தொடரும் நடைமுறையை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன? எனவும் கேள்வு எழுப்பியது.

வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த மனுவில், சோசலிசத்திற்கும், மதச்சார்பின்மை என்ற கருத்துகளுக்கு நான் எதிரானவன் அல்ல, அந்த சொற்கள் முகப்புரையில் கொண்டுவரப்பட்டதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இவிஎம்-களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனை கோரிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com