ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவி அரசியலமைப்பு! ராகுல் காந்தி

அரசியலமைப்பு நாளையொட்டி ராகுல் காந்தி பதிவிட்டது பற்றி...
ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பு நாளையொட்டி எக்ஸ் தளத்தில் விடியோ பகிர்ந்துள்ள ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

“அனைவருக்கும் அரசியலமைப்பு நாள் வாழ்த்துகள். நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும். ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அரசியலமைப்பு எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக நம் நாடு இருக்கும்.

இந்த நாளில், அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், போராளிகள் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் ஏற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com