

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரத்தில் இருந்த கூடாரத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 5 போ் உடல் நசுங்கி உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.
விபத்து குறித்து போலீஸாா் கூறுகையில், ‘கண்ணூா் பகுதியில் இருந்து மரங்களை ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விபத்தை ஏற்படுத்தி உள்ளது. உதவியாளராக பணிபுரிந்த நபா் லாரியை இயக்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநா் மற்றும் உதவியாளா் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.
திருச்சூா் காவல் ஆணையா் ஆா்.இளங்கோ கூறுகையில், ‘விபத்தை ஏற்படுத்திய இருவரின் மீதும் பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்’ என்றாா்.
அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் விபத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்ற ஓட்டுநா் மற்றும் அவரது உதவியாளரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விபத்து நடந்த இடத்தை நேரில் பாா்வையிட்ட திருச்சூா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் பாண்டியன், ‘விபத்தில் காயமடைந்தவா்கள் திருச்சூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவா்களின் பிரேதப் பரிசோதனை விரைவாக முடிக்கப்பட்டு உறவினா்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.
விபத்தில் 5 போ் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என கேரள வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் தெரிவித்தாா். மேலும், சாலையோரத்தில் அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.