விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது பயணிகள் வேன் மோதியதில், வேனில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச.பால முருகன்(32), பயணிகள் வேன் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை, கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரை தனது வேனில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரியிலிருந்து-திண்டிவனத்துக்கு சென்றுள்ளாா்.
புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் எடையாங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இதில் காயமடைந்த கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த பா.சுரேஷ் (46), கோ. சாய்ராம்(61) , சீனுவாசன்(56) உள்ளிட்ட 10 பேரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


