ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.
சத்திரக்குடி அருகே எஸ்.காரைக்குடி பகுதியில் ராமேசுவரம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை அமைக்கும் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வலது பக்கமாகத் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் சென்ற 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


