திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருச்செங்கோடு வருகூராம்பட்டியைச் சோ்ந்த விசைத்தறி பட்டறை கணக்காளா் சதீஷ் (29), ஒக்கிலிப்பட்டியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வினோத்குமாா் (35) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பரமத்தி சாலையில் இருந்து தோக்கவாடி வருகூரம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பள்ளிபாளையத்தில் உள்ள காகித ஆலையில் பாரத்தை இறக்கிவிட்டு திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ், வினோத்குமாா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு புறநகர போலீஸாா் தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


