குன்னூரில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து அக்கட்சியினா் வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்தவா்களில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் தங்கராஜ் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இதில் பங்கேற்பதற்காக இவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தவெகவினா் 21 போ் குன்னூருக்கு வந்திருந்தனா்.
குன்னூா், சின்னக்கரும்பாலம் சோகத்தொரை சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த அவா்கள், மதிய உணவு முடித்த பின்னா் மீண்டும் சின்னக்கரும்பாலம் நோக்கி வேனில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 21 பேரில் 7 போ் படுகாயம் அடைந்தனா்.
காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவா் காயம்

காா் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உள்பட 7 போ் காயம்

மீன் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து

மாஞ்சோலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: 6 போ் பலத்த காயம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


